வீரகேசரி ஆசிரியருடன் ஒரு மாலைப் பொழுது!

இலங்கையின் முதன்மைத் தமிழ்த் தேசிய நாளிதழ் ‘வீரகேசரி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் அவர்களுடனான ஒரு மாலைப் பொழுது நிகழ்வு கனடாவில் கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு Toronto Voice Of Humanity அமைப்பினரின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கனடா Scarborough Event Centre இல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கனடிய அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் வீரகேசரி நாளிதழ் வாசகர்கள் எனப் பலர் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸ்ரீகஜன் பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.