தபாலில் பறிமாறப்படும் போதைப்பொருள்?

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு பொதைப்பொருள் பொதியை எடுத்து செல்வதற்காக வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியதையடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு பொதி ஒன்றை எடுத்துச் செல்வதற்காக சொகுசு காரில் இருவர் வருகை தந்துள்ளனர்.

இதன்போது அங்கு முச்சக்கரவண்டியில் வருகை தந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் வானில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

காரில் பயணித்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்யச் சென்ற வேளையில் வானத்தை நோக்கிச் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைவாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.