செக் குடியரசு விமானம் நாட்டுக்கு 252 பயணிகளுடன் வந்தடைந்தது!

லாட் போலிஷ் விமானம் சேவைக்கு சொந்தமான முதலாவது ‘சார்ட்டர்’ விமானம்  புதன்கிழமை காலை செக் குடியரசில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

குறித்த விமானத்தில் 252 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அடுத்த வருடம் மார்ச் 2 ஆம் திகதி வரை இயக்கப்படும் குறித்த விமான சேவை செக் குடியரசின் செடோக், இலங்கை சுற்றுலா மற்றும் ஜெட்விங் டிராவல்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஹேலிஸ் விமான போக்குவரத்து நிறுவனம் இலங்கையின் லாட் போலிஷ் விமானம் சேவைக்கான பொது சேவைகள் நிர்வாகமாக இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வருகைதந்த குறித்த விமானத்திற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அன்பான வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.

பயணிகள் பாரம்பரிய வரவேற்பு நடன நிகழ்ச்சியுடன் அழைத்துவரப்பட்டதுடன் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை தேநீர்  பொதிகள் பரிசாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.