மட்டு. நாவலடி கடலில் மூழ்கி 11 பிள்ளைகளின் தந்தை பலி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடலில் மூழ்கி 11 பிள்ளைகளின் தந்தை பலியாகியுளார்.இச்சம்பவம்  நேற்று திங்கட்கிழமை (30) இடம்பெற்றுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர் எனத் தெரியவருகிறது.

அதிக மது போதையுடன்  காணப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

காத்ததான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.