பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள அதிகரிப்பு, சீருடைக்கான கொடுப்பனைவை அதிகரித்தல், மேலதிக நேரக் கொடுப்பனவு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலை சிற்றூழியர்கள் புதன்கிழமை (1) மதியம்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம்’ மட்டக்களப்பு கிளை தலைவர் கே.துரைசிஙகத்தின் தலைமையில் இவ்வைத்தியசாலையில் கடமைபுரியும் அனைத்து சிற்றூழியர்களும் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களின் பணி பணிப்கிஸ்கரிப்பு மற்றும் போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் அலுவல்கள் குறிப்பிட்டநேரம் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.