பூகோள அரசியலுடன் கடலட்டை பண்ணைகளை   தொடர்புபடுத்துவது அடிப்படையற்ற ஒன்றாகுமாம்! அமைச்சர் டக்ளஸ் கூறுகின்றார்

எமது பிரதேசத்திலுள்ள வளங்களை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடலட்டை குஞ்சு விற்பனை நிலையமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது மக்களால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் தொடர்புபடுத்துவது அடிப்படை அற்ற விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடலட்டை பண்ணை விடயத்தில் நாம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஆனால், மக்கள் பொருளாதார ரீதியில் வலுவடைவதை விரும்பாத அரசியல்வாதிகள் சிலரும், கடற்றொழிலாளர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்ற சிலரும், கடலட்டைப் பண்ணை தொடர்பாகத் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.