ஹற்றன் நகரை அண்மித்துள்ள பகுதிகளில் பொலிஸார் குவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹற்றன் நகரிலுள்ள கடைகளை சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு பொருந்தாத பொருள்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை நிறைவடையும் வரையில் முடியும் வரை இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதேவேளை, கொழும்பிலுருந்து ஹற்றன் நோக்கி பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹற்றன் மற்றும் ஹற்றனை அண்மித்த பகுதிகளில் பெருமளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.