மயிலந்தமடு அத்துமீறிய காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்!

மட்டக்களப்பு மயிலுத்தமடு மாதவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பைக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார்.

மயிலந்தனைஇ மாதவனை பகுதிகளில் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பவர்கள் பயன்படுத்திய நிலப்பகுதிகளை அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் இருந்து மயிலுத்தமடுவுக்கு வருகை தந்த சிங்கள மக்கள் அத்து மீறி காணிகளை அபகரித்து விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பவர்களின் கால்நடைகளைத் தாக்கி அநாகரிமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மயிலுத்தமடு மக்கள் வாழ்வாதார ரீதியாக பாரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் எடுத்து அத்துமீறிய காணி அபகரிப்பை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமக்கான நீதி கோறி மட்டக்களப்பு கால்நடை பணியாளர்கள் 50 நாள்கள் கடந்து கவனவீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஆதரவு வழங்குவதாகவும் குறித்த போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைக்கு மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாண ஆளுநர்இ மாவட்ட செயலாளர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் ச.கீதன் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.