சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் உறுதியளித்துள்ளார்.

சீன தூதுவர் தலைமையிலான குழுவினர்; யாழ் மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு பிரதேசத்திலுள்ள மக்களுக்கு 500 உலருணவுப் பொதிகளும் இதன்போது வழங்கப்பட்டது.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது இலங்கை கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும் சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.