அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட்நேதன் வருகிறார்

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய உட்கட்டமைப்பு முதலீட்டுக்கான ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்காகவே அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

தெற்காசிய பிராந்தியத்திற்காக பிரஜைகள் அபிவிருத்தி வர்த்தக நிதியத்திற்கான அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் முதலீட்டு உறுதிப்பாட்டிற்கான ஒப்பந்த கைச்சாத்திலும் ஸ்கொட் நேதன்  கலந்துகொள்ளவுள்ளார். இது யுஎஸ்எயிட் ஸ்ரீலங்காவுடன் இணைந்து கடன் திட்டங்களை ஊக்குவிக்கின்றது.

இலங்கை வரும் ஸ்கொட் நேதன்  நாட்டின் உயர்மட்ட வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கிகளின் தலைவர்களையும் சந்திக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் பேச்சுக்களில் ஈடுபடுவார்.

மேலும் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் நிதியுதவியில்  வணிகங்களை மேற்கொள்ள எவ்வாறு துணைபுரிகிறது என்பதை அவதானிப்பதற்காக அதன் வாடிக்கையாளர்களின் வசதிகளையும் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.