மட்டு.வவுணதீவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியால் சென்ற மாணவர்கள் மீது பணை மரத்தில் இருந்த குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (08) காலை 7.00 மணியவில் இடம்பெற்றுள்ளது.

குறிஞ்சாமுனை பகுதியில் பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் வீதியால் நடந்து சென்ற மாணவர்களை தாக்கியுள்ளது.

இந்நிலையில், 8 மாணவர்கள் அருகிலுள்ள தாண்டியடிபிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த குளவி கூடுகட்டியுள்ள பனை மரங்களில் இருந்து கூடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.