களுத்துறையில் விபத்து – 13 பேர் காயம் !
November 8th, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டது.
- கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
களுத்துறை, நாகொட, கலஸ்ஸ பிரதேசத்தில் மாபலகமவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த சுமார் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
கருத்துக்களேதுமில்லை