அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கை கட்டளை தளபதி பாதுகாப்பு செயலர் ஜெனரல் கமல் குணரத்ன சந்திப்பு!

இலங்கை வந்துள்ள அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கோட்டை ஸ்ரீPஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் வியாழக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியை வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கிடையில் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது மற்றும் பயிற்சி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

ரியர் அட்மிரல் வில்லியம்ஸ் தற்போதைய நியமனத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர் சிந்தக்க அபேகோன் ஆகியோரும் கலந்துகொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.