மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீ வைத்து எரிப்பு!
மட்டக்களப்பு,ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்று நேற்று இரவு மர்ம நபர்கள் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு -பொத்துவில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்தே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று பேருந்தை ஆரையம்பதி பிரதான வீதியில் நிறுத்தி வைத்துவிட்டு அதன் உரிமையாளர் தனது சொந்த இடமான கொக்கட்டிச்சோலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் குறித்த பஸ் வண்டி தீப்பற்றி எரிவதாக காத்தான்குடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் தீயணைப்புப் படையினரது உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை