யாழில் வீதியில் நெல் விதைத்துப் போராட்டம்!
வீதியில் நெல் விதைத்து யாழில் இன்று விநோத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்புச் செய்துதருமாறு கோரியே மூளாயில் மக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும், உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றினர்.
கருத்துக்களேதுமில்லை