வரவு – செலவுத் திட்டத்துக்கு அரச நிதி குறித்த குழு அனுமதி

2024 நிதி ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு   அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய  2024 ஆம் ஆண்டுக்கான மீண்டுவரும் செலவீனம் 5350 பில்லியன் ரூபா. மூலதன செலவு 2473 பில்லியன் ரூபா என மொத்தமாக 7823 பில்லியன் ரூபா எனவும் கடன் பெறும் எல்லை 3900 பில்லியன் ரூபா எனவும்  அரச நிதி தொடர்பான குழுவில் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான   அரச நிதி தொடர்பான குழு வெள்ளிக்கிழமை கூடியது.

இதன்போது 2024 நிதி ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்  தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 2024 நிதி ஆண்டுக்கான  மீண்டுவரும்  மற்றும் மூலதன  செலவு, கடந்த வருடத்துக்கு இணையாக ஒப்பீட்டளவில் மதிப்பீடு செய்யப்பட்டு ஒரு சில விடயங்கள் தொடர்பில்  எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

வருடாந்த வரவு – செலவுத் திட்ட யோசனைகளில் பெரும்பாலானவை யோசனைகளாகவே வரையறுக்கப்பட்டுள்ளமை சிக்கலானதென குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இதற்கமைய வரலாற்றில் சகல அரசாங்கங்களாலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் குறைந்தபட்ச யோசனைகள்  மாத்திரமே  இறுதிக்கட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு தவறான ஏடுத்துக்காட்டாகும். இந்த தவறை திருத்த்திக்கொண்டு வரவு செலவுத்திட்டத்தின் பின்னணியை ஆராய்ந்து உரிய தீர்மானம் எடுக்க வேண்டும்.

இதற்கமைய 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் முன் மொழியப்பட்ட விடயங்கள்  எந்தளவுக்கு சாத்தியப்படுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பாக விரிவான அறிக்கை 13 ஆம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்.

வரவு செலவுத்திட்டத்தின்  6 ஆவது  அத்தியாயத்துக்கு அமைய  ” அபிவிருத்தி நடவடிக்கைகள் ”என்ற செயற்திட்டத்துக்கு  ஒதுக்கப்பட்டுள்ள நிதியை  பிறிதொரு விடயதானத்திற்கு அமைய  பிறிதொரு செயற் திட்டத்துக்கு மாற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய  2016 ஆம் ஆண்டு முதல் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியம் தொடர்பாக ஆவணப்படுத்தல் தரவுகளை வௌ;வேறாகக் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுக்கப்பட்டது.

அத்துடன் வருடாந்த வரவு – செலவுத்திட்ட பற்றாக்குறை 5 வீதத்திற்கும் குறைவாக பேணப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.