மாலைதீவு ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹை நேற்று வியாழக்கிழமை (16) மாலை மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி சோலிஹ் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து இலங்கை எவ்வாறு படிப்படியாக மீள்கிறது என்பது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் மாலைதீவு ஜனாதிபதியும் கலந்துரையாடினர்.

தனது நிர்வாகத்தின் கீழ் பல இருதரப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒத்துழைத்தமைக்காகவும் இலங்கை ஜனாதிபதிக்கு மாலைதீவு ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்தார்.

இலங்கைக்கு மாலைதீவு வழங்கிய உதவிகள் மற்றும் ஆதரவுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவை மாலைதீவின் முதல் பெண்மணி ஃபஸ்னா அஹமட் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பும் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.