பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இணையும் இலங்கையின் விண்ணப்பம் குறித்து விசேட அவதானம்!

பிராந்திய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில்  இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் குறித்து பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரக்க பாலசூரிய, வியட்நாம் தூதுக்குழுவினருக்கிடையிலான சந்திப்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் காலம் உறுப்பினரும், வியட்நாமின் மாகாணக் கட்சிக் குழுவின் செயலாளருமான புய் வான் ங்கியெம் தலைமையிலான 35 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட வியட்நாமிய தூதுக் குழுவினர், பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தாரக்க  பாலசூரியவை வெள்ளிக்கிழமை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில்  சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது அரசியல், வர்த்தகம், முதலீடு, கலாசாரம், கல்வி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பரஸ்பரம் ஆர்வமுள்ள பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு இந்தச் சந்திப்பின் போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் போது, பிராந்திய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில்  இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.