2 கருப்பைகள்,2 குழந்தைகள்: வைரலாகும் அதிசயப் பெண்
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவருக்கு 2 கருப்பைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர் .
இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ள நிலையில், அவரது 2 கருப்பைகளிலும் 2 குழந்தைகளை சுமந்து வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கடவுளின் ஆசீர்வாதமாகக் கருதுவதாக கெல்சியும் அவரது கணவரும் தெரிவித்துள்ளனர்.
இது மருத்துவ வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ”ஒவ்வொரு கருப்பையும் வெவ்வேறு நேரங்களில் சுருங்க கூடும் என்பதால் குழந்தைகள் மணி நேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம்” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை