விடுதலைபோராட்ட திரைப்படங்கள், நாடகங்களில் நடித்து பிரபலமான மாணிக்கம் ஏரம்பு காலமானார்!

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றில் தனது கலைப் பங்களிப்பை வழங்கிய மாணிக்கம் ஏரம்பு சனிக்கிழமை  அதிகாலையில் வட்டுக்கோட்டை துணவி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

23.04.1942 அன்று பிறந்த இவர் சிறு வயது தொடக்கம் நடிப்பில் ஆர்வம் கொண்டு பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது தனி ஈழப் போராட்டம் வலுப்பெறுவதற்கு தன்னாலான கலைப் பங்களிப்பை வழங்கி வந்தார்.

போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் கூத்துக்கள் உள்ளிட்ட நாடகங்களில் தனது பங்களிப்பை வழங்கி வந்ததுடன், அவை சார்ந்த கலைஞர்களுக்கு பல்வேறு வகையில் வழிகாட்டி வந்தார்.

அத்துடன், வெளிநாடுகளுக்கு சென்றும் தனது நாடகங்களை வழங்கி ரசிகர்களைக் கவர்ந்தார்.

இவர் வயது மூப்பு காரணமாக தனது 91 ஆவது வயதில் மறைந்தார். இலங்கையின் திரைத்துறைக்கு இவரது மறைவு பேரிழப்பாகும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.