சிறுவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் விரைவில் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தேவை : ஐ.நா.சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக்

சுற்றுச்சூழல் பேரழிவுகள் உள்ளிட்ட ஆபத்துக்களால் சிறுவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் விரைவான வேகத்தில் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் மேலும் கூறுகையில்,

சிறுவர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் ஆண்டுநிறைவு 34 வருடங்களுக்கு முன்னர் 1989 நவம்பர் 20ஆம் திகதி உலகத் தலைவர்கள் அனைவரும் உலகில் உள்ள சிறுவர்களின் ஒற்றுமைக்கான அருமையான தருணத்தில் ஒன்றிணைந்தனர்.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் சமவாயமானது ஒவ்வொரு சிறுவரினதும் உரிமைகளைப் பாதுகாக்கவும், நிறைவுசெய்வதற்குமான உறுதிப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுவர் பராயம் என்பது அல்லது 18 வயதுக்குக் குறைந்தவர்கள் என்பது வாழ்க்கையில் பௌதீக வளர்ச்சி, விளையாட்டு, கற்றல் மற்றும் உளரீதியான முன்னேற்றம் என்பவற்றுக்கான விசேட தருணம் என இந்த சமவாயம் அங்கீகரிக்கிறது.

மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களின் வரலாற்றில் இந்த சமவாயமே மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டதொன்று என்பதுடன், இது பல ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் சிறுவர்களின் உரிமைகைளை மாற்றியமைத்தது.

1990ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட முதல் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்பதுடன், 1991ஆம் ஆண்டு இதற்கு இலங்கை ஒப்புதல் வழங்கி இதை நடைமுறைப்படுத்தவும், பொறுப்புக் கூறுவதற்கும் அர்ப்பணிப்பைத் தெரிவித்தது.

அன்றிலிருந்து இலங்கையானது உலகளாவிய தடுப்பூசியேற்றலைப் பேணிவருதல், ஆரம்பக் கல்விக்கான உலகளாவிய அணுகலை அடைதல் – 99 விகிதம், பிறக்கும் குழந்தைகள் தமது ஐந்தாவது வயது பிறந்த நாளுக்கு முன்னர் இறக்கும் நிலைமையை குறைந்த மட்டத்தில் பேணுதல் – 1000 பிறப்புக்களில் 11, பாதுகாப்பான குடிநீருக்கான அணுகலை 88.5% ஆக நிலைக்கச்செய்தல் போன்ற விடயங்கள் உள்ளிட்ட சிறுவர்களின் உரிமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது:

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதி, சுனாமி, கொவிட்-19 மற்றும் அண்மைய பொருளாதார நெருக்கடி போன்ற காலகட்டங்கள் உள்ளடங்கலாக சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் இவை சிலவாகும்.

இந்த முன்னேற்றத்தை நாம் கொண்டாடும் அதேநேரம், நாம் இன்னமும் முன்னெடுக்க வேண்டிய எஞ்சியுள்ள வேலைகளையும் சிறுவர் உரிமைகளுக்கான சமவாயத்தின் ஆண்டு நிறைவானது நினைவுபடுத்துகிறது.

குறிப்பாக அண்மைய இலங்கையின் பல்பரிமாண வறுமைச் சுட்டெண்ணுக்கு அமைய 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பத்துப் பேரிலும் நான்கிற்கும் அதிகமானவர்கள் (42.2 விகிதம்) சுகாதாரம், கல்வி, அத்தியாவசியமான வாழ்க்கைத்தரம் அல்லது ஆரம்ப குழந்தைப் பருவ வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புபட்ட இரண்டு அல்லது அதற்கும் மேலான அடிப்படை உரிமைகளை இழந்து அல்லது இவை இழக்கப்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர்.

2021 – 2022 காலப்பகுதியில் கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய மட்டத்திலான கணக்கெடுப்புக்கு அமைய தரம் 3 மாணவர்களில் 14% மட்டுமே கல்வியறிவில் அனைத்து அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளையும் அடைந்துள்ளனர். எண்ணறிவு 15%. ஆயினும்கூட, இந்தத் தேர்ச்சிகள் குழந்தைகள் தங்கள் அறிவையும் எதிர்காலத்திற்கான பல்வேறு திறன்களையும் உருவாக்க அடித்தளமாக அமைகின்றன.

இலங்கை முழுவதிலும் 10,000ற்கும் அதிகமான சிறுவர்கள் நிறுவனமயப்படுத்தப்பட்ட பராமரிப்பு நிலையங்களிலும், தடுப்புக் காவல் நிலையங்களிலும், தரக்குறைவான வாழ்க்கை நிலைமைகளில் முழு அபிவிருத்தியை அடைய முடியாத நிலையில் உள்ளார்கள். இவர்களில் 90% க்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களுடைய குடும்பங்களிடம் போதிய ஆதரவை வழங்கி அனுப்பிவைக்க முடியும்.

16-17 வயதுடைய சிறுவர்கள் இன்னமும் சட்டத்தினால் வயதுவந்தோர் என மதிக்கப்படுவதுடன், நீண்ட காலத்துக்கு அவர்கள் தடுத்துவைக்கப்படுகின்றனர்.

வீடுகள், பாடசாலைகள் மற்றும் சமூகத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் சிறுவர்களைத் தொடர்ந்தும் துரத்துகின்றன. பொருளாதார நெருக்கடிகள் காரணமாக துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதேநேரம் இதற்குப் பதிலிறுக்கும் சேவைகளும் இடர்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

சிறுவர்களின் உரிமைகளில் காணப்படும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான முக்கிய கருவி அதற்காக ஒதுக்கப்படும் வளங்களாகும். எவ்வாறாயினும், கல்வி மற்றும் சுகாதார வரவுசெலவுத் திட்டங்கள் சர்வதேச அளவுகோல்களை விட மிகக் குறைவாகவே உள்ளன என்பதுடன், அவை அபிவிருத்தியைத் தக்கவைத்துத் துரிதப்படுத்த போதுமானதாக இல்லை.

மதிப்பீடுகளுக்கு அமைய, 2023ஆம் ஆண்டில் இலங்கை கல்விக்கு முழு அரசாங்க செலவீனத்தில் 7.2 வீதத்தை (15 முதல் 20 என்பதே சர்வதேச அளவு எல்லையாகும்) அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 வீதத்திற்குச் (சர்வதேச அளவு எல்லை 4 முதல் 6) சமமான அளவையே முதலீடு செய்துள்ளது.

2023 இல் சுகாதாரத்தில் அரசாங்கத்தின் ஒதுக்கீடானது மொத்த அரசாங்க செலவீனத்தில் 7.3 வீதம் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 வீதம் (உலக சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கு 5 வீதம் என்பது சர்வதேச அளவு எல்லையாகும்) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எழுத்துக்கள் யாவும் சுவரில் காணப்படுகின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல் பேரழிவுகள் உள்ளிட்ட ஆபத்துக்களால் சிறுவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் விரைவான வேகத்தில் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. எனவே யுனிசெப் இதற்காக அழைப்பு விடுக்கிறது:

சிறுவர்களின் நிலைமைகள் மேலும் மோசமடைவதைத் தவிர்ப்பதற்கும், அண்மையில் ஏற்பட்ட அதிர்வுகளின் விளைவுகளிலிருந்து மீளெழுவதற்கும், அவர்களின் உள்ளார்ந்த ஆற்றலை மேம்படுத்துவதற்கும் வளர்ச்சியின் பாதையிலும் கொண்டு செல்வதற்கு சமூகத்துறைகள் தொடர்பான செலவீனங்களை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் அதிகரித்தல்.

உயர்ந்த வருவாயைப் பெற்றுக்கொள்ள இளம் சிறார்களில் இலங்கை வினைத்திறனாக செலவு செய்வதுடன், முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். சிறுவர் முன்னேற்றம் குறித்த ஆதாரங்கள் மற்றும் பொதுச் செலவீனங்கள் என்பன முதல் 1000 நாட்கள் உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க சிறந்த வாய்ப்புக்களை வழங்குகின்றன என்பது சிறுவர் முன்னேற்றம் குறித்த ஆதாரங்கள் மற்றும் வினைத்திறனை வழங்குவதற்கு முக்கியம் என்பது கடந்த வருடங்களில் காண்பிக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான நன்மை என்பது காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட மற்றும் அளவிடக் கூடிய கொள்கையாகும். இது வறுமையைத் தடுப்பதுடன், சிறுவர்களின் ஆரோக்கியம், போசாக்கு மற்றும் கல்வியின் வெளிப்பாடு என்பவற்றுக்கு உதவுகிறது. கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான வவுச்சர்களை வழங்குவது போன்ற திட்டங்களின் மூலம் முன்னேற்றகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

மேலும் பொருளாதார முன்னேற்றத்துக்கு தற்பொழுது மனித மூலதன முன்னேற்றத்தின் பிரதான அடிப்படையாகக் காணப்படும் அடிப்படைக் கற்கைகளைப் பலப்படுத்துவதற்கு நாடு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 டொலர் முதல் 15 டொலர் வரையிலான சிறிய அளவிலான உதவிகள் மூலம் அனைத்து சிறுவர்களும் அவசியமான அடிப்படைத் திறன்களை உறுதிப்படுத்தக் கூடிய கல்வியைப் பலப்படுத்த முடியும் என்பதை ஆதாரங்கள் காண்பிக்கின்றன.

ஆரம்பக் கல்விக்கான விரிவான கற்றல் மீட்புத் திட்டத்துக்கான மூலோபாயத்தை (2023-2025) கல்வி அமைச்சு தயாரித்திருப்பதுடன், அனைத்து ஒன்பது மாகாணங்களும் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்துள்ளன. இது வரவேற்கத்தக்கக் கூடிய நடவடிக்கைகளாக இருந்தாலும் இவற்றுக்கான நிதியளிப்பு மற்றும் வினைத்திறனான நடைமுறைப்படுத்தல் என்பவற்றுக்கு போதிய வளம் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமாகும்.

சிறுவர்களுக்கு எதிராக அனைத்து வகையிலான வன்முறைகளையும் கையாழுதல்:

மாற்று பராமரிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும். இது ஒரு விரிவான மாற்று பராமரிப்பு விருப்பங்களை கோடிட்டுக் காட்டும் மாற்றுப் பராமரிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு யுனிசெப் வலியுறுத்துகிறது. முதன்மையாக அனைத்து சிறுவர்களுக்கும் குடும்ப தீர்வுகளை கண்டறிதல் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சேவைகளை வழங்கும் அனைத்து முறையான கட்டமைப்புகளை சீர்திருத்த ஊக்குவிக்கிறது.

அனைத்து மட்டங்களிலும் உடல் ரீதியான தண்டனையைத் தடை செய்வதற்கும் அதனைக் குற்றமாக்குவதற்கும் அவசர நடவடிக்கைகளை எடுக்கவும். அதன் பயன்பாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் தெரிந்தாலும், இலங்கையில் உடல் ரீதியான தண்டனை சட்டத்திற்கு உட்பட்டது – பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒழுக்கம் மற்றும் திருத்தம் என்ற பெயரில் குழந்தைகள் மீது உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் உள்ளடங்கலாக மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு விடயத்திலும் இறுதியாக சிறுவர்களின் உரிமைகள் தொடரப்பட வேண்டும். ஒவ்வொரு பிரைஜயும் சிறுவர்களின் உரிமைகளை நிலைநிறுத்தி, சிறுவர்களின் நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தால் சிறுவர்களின் உரிமைகளை அடைய முடியும்.

சிறுவர் உரிமைகளை நிலைநிறுத்தி, சிறுவர்களின் நலன்களின் அடிப்படையில் முடிவுகளை மற்றும் செயல்களை எடுத்தால் மட்டுமே சிறுவர் உரிமைகளை அடைய முடியும். சிறுவர்களின் உரிமைகளை வெல்வதில் இலங்கை தனது திறமையை நிரூபித்துள்ளது. இதற்குத் தற்பொழுது ஒரு தெரிவு உள்ளது. செயலற்ற தன்மை அதில் ஒன்று அல்ல என மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.