வீதியில் காணப்பட்ட மழையில் வழுக்கி சுரங்கப் பாதையில் மோதியது லொறி!

மீரிகமவிலிருந்து தலவாக்கலை  அக்கரபத்தனைநோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியொன்று வீதியில் மழை நீரில் வழுக்கி சுரங்கப் பாதையில் மோதியுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பெய்த மழையின்போது  சென்று கொண்டிருந்த  லொறி, மழை நீரில்  வழுக்கி சுரங்கப்பாதையில் மோதி  நின்றதாகவும், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.