வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது!

”கடுமையான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் கூட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வெளியே வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் ‘நாகராஜா அலெக்ஸ்‘ மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது” என ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ”சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவர்
முழுமையான நீதி விசாரணைக்கு முன்பாகவே மரணத்தை தழுவியுள்ளார். இது நடந்திருக்கவே கூடாத
கொடிய துயர் நிகழ்வு.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன. உண்மைகள் கண்டறியப்பட்டு நியாயங்கள் உணர்த்தப்பட வேண்டும்.

மரணமடைந்த இளைஞனின் குடும்பத்தவர்கள் படும் இழப்பின் வலிகளில் பங்கெடுக்கின்றேன் ஆறுதலும் ஆழ்மன அஞ்சலியும்!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.