நீதிமன்றை ஆடைபைக்குள் வைத்துக்கொள்ள முயற்சி! மைத்திரிபால சிறிசேன வேதனை

பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதியரசர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விவாதிக்க கூடாது, நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்குகளை மேற்கோள்காட்டி விவாதிக்கக் கூடாது என நாடாளுமன்ற நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது சபையில் நீதிபதிகளின் பெயர் குறிப்பிடப்படுகிறது. விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீதிமன்றத்தை தமது ஆடை பைக்குள் வைத்துக் கொள்ள ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புஇடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான  வரவு -செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மற்றும்  பிரதமருக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான  குழுநிலை விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

ஜனாதிபதியாக நான் பதவி வகித்த போது வனஜீவராசிகள் பாதுகாப்பிற்கும், வனவள பாதுகாப்பிற்கும்  பிரத்தியேக நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். எனது ஆட்சிகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்டன.

புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தி இரத்தினபுரி, பல்லேகல உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில்  மாணிக்கக்கல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் நேரடியாக மாசடைகின்றன. இயந்திரங்கள் ஊடாக மாணிக்கக்கல் அகழ்வு பணிகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.

சமூகக் கட்டமைப்பில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தற்போது சாதாரணமாகி விட்டது. பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். இவ்வாறான நிலையில் எவ்வாறு சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்க முடியும். ஆகவே போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற உரையில் நீதியரசர்களின் பெயர் குறிப்பிட்டு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றமை தற்போது வழமையாகி விட்டது. நாடாளுமன்ற நிலையியற் கட்டளையில்  ‘பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதியரசர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு  விவாதிக்கக் கூடாது. நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள  வழக்குகளை மேற்கோள்காட்டி விவாதிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது சபையில் நீதிபதிகளின் பெயர் குறிப்பிடப்படுகிறது. நீதிமன்றத்தை தமது ஆடை பைக்குள் வைத்துக் கொள்ள ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.