பரதம் குறித்த மௌலவியின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டனம்!

மௌலவி ஒருவரால் பரதநாட்டியம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து மிகுந்த கவலையளிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மதங்கள் மற்றும் கலாசார விடயங்கள் நிந்திக்கபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதனை வன்மையாகக் கண்டிப்பதாக  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து இந்து மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு நாம் எமது கவலையையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறோம்.  இதேவேளை தவறை உணர்ந்து அதற்கான நடவடிக்கை எடுத்துள்ள உலமா சபைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இதுபோன்ற தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் இருக்க உரிய வழிகாட்டுதல்களை முன்னெடுக்க வேண்டும் என  உலமா சபையிடம் இந்து அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.