நீர்கொழும்புமுதல் யாழ்.வரை சைக்கிளில் முதியவரின் சாதனை பயணிக்கும் முயற்சி!

‘சமாதான துவிச்சக்கரவண்டி பயணம்’ என்ற தொனிப்பொருளில் 67 வயதுடைய நபர் ஒருவர் சனிக்கிழமை சைக்கிளில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பம்புக்குளிய தேவாலயம் முன்னாலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய 24 மணிநேர சாதனை பயணத்தில் ஈடுபட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இச்சாதனையில் ஈடுபட்டுள்ள ரிச்சர்ட் பெர்னாந்து நுவன் புள்ளே என்ற இந்த நபர், 361 கிலோமீற்றர் தூரத்தை சைக்கிளில் 24 மணித்தியாலங்களுக்குள் கடந்து யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இப்பயணத்தை ஆரம்பிப்பதற்காக பம்புக்குளிய பிரதேசத்தில் உள்ள முதியவரது இல்லத்தில் இருந்து அவர் மேளதாள வாத்தியத்துடன் பிரதேசவாசிகளால் பம்புக்குளிய தேவாலயம் வரை ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பம்புக்குளிய தேவாலயத்தில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்ட பின்னர், பிற்பகல் 12.45 மணியளவில் அவர் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

இந்த முதியவர் கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் திகதி நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் இருந்து மடு தேவாலயம் வரை 13 மணித்தியாலங்களுக்குள் சைக்கிளில் சென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.