ஒழுக்க விழுமியங்களுக்கு மாறாக செயற்பட்டால் பதவி நீக்கலாமாம்! ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டென்கிறார் பந்துல

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்கட்சியுடன் இணைந்து பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் ஆளும் கட்சியில் இருக்க வேண்டிய தேவை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள பிரச்சினைகளை அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதற்கே அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இருக்கின்றார்.

அரசாங்கத்தால் அந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. அதனால் எதிர்கட்சியுடன் இணைந்து பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் நாங்கள் எதற்கு அரசாங்கத்துடன் இருக்கின்றோம்?

எந்தவொரு தரப்பினருடனும் பேச்சு நடப்படவேண்டுமானால் உரிய தரப்பினரை அமைச்சரவைக்கு வரவழைத்து பேச்சுகளை நடத்தி தீர்வு காண முடியும்.

வரலாற்றில் அமைச்சரவை ஒழுக்க விழுமியங்களுக்கு மாறாக செயற்பட்ட அனைவரையும் குறித்த சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் பதவி நீக்கம் செய்திருக்கின்றார்கள்.

இவ்வாறே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை பதவிநீக்கம் செய்தார்.

இவ்வாறே இந்த அமைச்சரவையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல காரணிகளை விசாரித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவுடன் இணைந்து அமைச்சரவை நடவடிக்கைகளை முன்னெடுக்க சிரமம் என்று குறிப்பிட்டு பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.