யாழ். மத்திய பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் கஞ்சா போதைப்பொருளுடன், கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞனை கைதுசெய்து சோதனையிட்ட போது, இளைஞனிடம் இருந்து ஒரு கிலோ 480 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.