பல்கலை நினைவுத் தூபி விவகாரம்: மீண்டும் விசாரணைகளுக்கு அழைப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில்  இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், தூபி அமைப்புக்கான நிதி கையாளுகை தொடர்பிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூவர் கொடுத்த  முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த விசாரணைகள்  முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சிரேஷ்ட பொருளாளரும், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர் ஒருவரும், தூபி அமைக்கப்பட்ட வேளையில் இருந்த மாணவர் ஒன்றியத் தலைவரும் திங்கட்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் குறித்த விசாரணைகளில் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.