ஈ-60 கொள்கை ஜனவரி மாதம் முதல் அமுல் – விவசாய அமைச்சர்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும், தேயிலை கொழுந்தின் தரத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்காக ஈ-60 கொள்கை ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினர்களுக்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஈ-60 கொள்கை என்பது, தேயிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இலைகளில் குறைந்தது 60 சதவீதம் உயர் தரத்தில் இருக்க வேண்டும் என்பதாகும்.

இந்நிலையில், ஏதேனும் ஒரு நிறுவனம் இதனை மீறினால் அவர்களின் உரிமத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தேயிலை சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.