கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸாரின் அநீதி நிறுத்தப்பட வேண்டும்!  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து

கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருவதாகவும், இந்த அனைத்து பதிவு விவர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுகின்றன எனவும், நாட்டின் அரசமைப்பை மீறி சிங்கள மொழியில் மட்டுமே இந்த விவர பதிவுப் பத்திர ஆவணங்களை வழங்குகின்றனர் என்றும், அது தவறான விடயம் என்றும்,’ரணில் பொலிஸ் இராஜ்யமா நடக்கிறது என  சந்தேகம் எழுவதாக’ நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் முகமாக கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

இந்நடவடிக்கை தவறானது என்றும்,ஆள்களைப் பதிவு செய்யும் நடைமுறையொன்று உள்ளதாகவும், இந்தப் பதிவு முறை குறித்த நடைமுறையையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும்,இதற்காக பொலிஸ் முறையைப் பயன்படுத்தி அநீதி இழைக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் போலவே குற்றங்களைக் குறைப்பதும் முக்கியம் என்றாலும்,ஏதேனும் நியாயமற்ற முறை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என்றும், எந்தவொரு வேலைத்திட்டத்திலும் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.