இலங்கையுடனான தமது உறவுகளை மேம்படுத்த சிங்கப்பூர் பிரதமர் ஆர்வம்
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து வலியுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் லீ சியன் லூங் கடிதம் எழுதியுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் சிங்கப்பூர் பிரதமர் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை முன்னேற்றும் நடவடிக்கையில் வெற்றி பெறுவார் என்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை வெளியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை