இயந்திர தகடுகளைத் திருடிய குற்றச்சாட்டில் பூசகர் கைது!

யாழ். ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தின் விக்கிரகங்களின் கீழிருந்த இயந்திரத் தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில்  பூசகர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பூசகர் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆலயத்தின் பூசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகம் ஏற்படாதவாறு , விக்கிரகங்களை இருப்பிடத்தில் இருந்து மாற்றி  இயந்திரத்தகடுகளைத் திருடி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  அவரால்  திருடப்பட்ட இயந்திரதடுகள் சுமார் 10 பவுண் பெறுமதியானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.