தேசிய ஒளடத கட்டுப்பாட்டு சபைக்கு சுகாதார அமைச்சர் திடீரென விஜயம்!
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபை மற்றும் தேசிய மருந்து தர பாதுகாப்பு ஆணையகம் என்பவற்றைக் கண்காணிப்பதற்காக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்காக துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுகாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அண்மையில் தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபை மற்றும் அதன் கீழ் நிர்வகிக்கப்படும் தேசிய மருந்து தர பாதுகாப்பு ஆய்வு கூடத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம மற்றும் தேசிய மருந்து தர பாதுகாப்பு ஆணையத்தின் பதில் பணிப்பாளர் கௌரி கத்ராராச்சி ஆகியோரால் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர் ரமேஷ் பத்திரண, தேவைக்கேற்ப பணியாளர் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் அதிகாரசபையின் மனித வள மேம்பாட்டிற்கு உரிய கவனம் செலுத்துமாறும், அதிகாரசபையின் வேலைப்பழுவுக்கு ஏற்றவாறு பதவி நிலைகளுக்கு அனுமதி வழங்குமாறும் குறிப்பிட்டார்.
அதற்கமைய தேசிய மருந்து தர பாதுகாப்பு ஆணையத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளை மற்றும் தேவையான உபகரணங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் இதன் போது ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை