வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கும் கடற்படையினர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன .

அனுராதபுரம் மாவட்டத்தின் பதவியா, பராக்கிரமபுர பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படுகின்றது .

அதன்படி அநுராதபுரம் மாவட்டத்தின் பதவியா, பராக்கிரமபுர பிரதேசத்தில் மா ஓயா பெருக்கெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .

மேலும், மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான மேலதிக ஆயத்தப்படுத்தல்களைக் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி கண்டாவளை, முல்லைத்தீவு மாங்குளம், மன்னார் மாந்தை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.