உலக வங்கியின் 5 வருட திட்டத்தை சிறப்புற முன்னெடுத்த சுகாதாரதுறையினர் கௌரவிப்பு
உலக வங்கியின் அனுசரணையில் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் நிறைவை முன்னிட்டு இந்தச் செயற்திட்டத்தில் பங்குகொண்டவர்களையும் ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் சுகாதார துறையினர் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கு நினைவு சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் அ.லதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெ.முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம்.கொஸ்தா, பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை