வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு என்கிறார் டக்ளஸ்!

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களிற்குள் தீர்வு காணமுடியும் எனவும், வடமாகாண கடற்றொழிலாளர் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.