வவுனியாவில் 1,253 பேருக்கு இலவச கண்சத்திர சிகிச்சை!

இந்திய மற்றும் இலங்கை வைத்திய நிபுணர்களால் வவுனியாவில் 1253 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் ஜே.எம்.நிலக்சன் கருத்துத் தெரிவிக்கையில் –

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸின் நெறிப்படுத்தலில் வைத்திய நிபுணர் சர்வேஸ்வரனின் முயற்சியால் இந்தியத் துணைத் தூதரகத்துடன் இணைந்து  இலவச கண்  சத்திர சிகிச்சை முகாமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இம்மாதம் 11 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட குறித்த சத்திர சிகிச்சை முகாம் இம்மாதம் 21 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் 1253 பேர் கலந்துகொண்டு  சிகிச்சை பெற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.