கட்டுநாயக்கவில் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகளுடன் இந்தியப் பெண் ஒருவர் கைது!
12 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவந்த இந்தியப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் 35 வயதுடைய இந்திய பெண்ணாவார்.
இவரது கணவர் கண்டி பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் இலங்கை குடியுரிமை விசாவை பெற்றுள்ளார் எனப்; பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தனது இரு குழந்தைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் இவர் வயிற்றில் கட்டியிருந்த பட்டி மற்றும் பயணப் பை ஆகியவற்றில் இருந்த 8 பொதிகளிலிருந்து 12 கோடி ரூபா பெறுமதியான 1,438 பவுண் நகைகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.(
கருத்துக்களேதுமில்லை