இங்கிலாந்தின் கழகமட்ட கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்து யுவதிக்கு கிடைத்தது இடம்!

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்தின் கழகமட்ட கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.

யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்தின் சன்ரைஸ் அகடமி குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான சன்ரைஸ் அக்கடமி குழுவில், 15 வீராங்கணைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவராகவே அமுருதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நீண்டகால விரிவான தேர்வு செயல்முறையின் அடிப்படையில், குளிர்கால பயிற்சி திட்டத்தில் இத்தேர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து பேர் கொண்ட அணி பின்வருமாறு:-

மோலி பார்பர்-ஸ்மித், ஒலிவியா பார்ன்ஸ், பிரிஷா பேடி, ஈவி புக்கர்,ஹன்னா டேவிஸ், மே டிரிங்கெல், இசபெல்லா ஜேம்ஸ், பெல்லா ஜான்சன்,லைலா ,  ஓலோரன்ஷா, சாரா பியர்சன்,  சார்லி பிலிப்ஸ், மாபெல் ரீட், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் ரிவா பின்டோரியா, அமுருதா சுரேன்குமார்,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.