கொழும்பு ஆமர் வீதி பாரிய தீ பரவல்: வர்த்தக நிலைய பொருள்கள் நாசம்!

கொழும்பு ஆமர் வீதியின்  கிரீன் லேனில் வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட தீயால் அங்கிருந்த  பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

தீயணைப்பு பிரிவினர் நான்கு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில்  எவருக்கும் பாதிப்பு  ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆர்மர் வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.