யாழ்.மாவட்டத்தில் பரவும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவையாம்! சத்தியமூர்த்தி எச்சரிக்கை

‘யாழில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை’ என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இதனைத்  தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது பரவிவரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகளவான நோயாளர்கள் இருப்பதால் அதனை சூழவுள்ள பகுதிகளிலுள்ளவர்கள் அதிகளவாக அக்கறையுடன் இருக்க வேண்டும்.  நோய் நிலைமையைக் கட்டுப்படுத்த மேலதிகமாக அயல் மாவட்டங்களிலிருந்தும் சுகாதாரப் பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன்  தற்போது பரவியுள்ள டெங்கு தொற்று மூன்றாவது வகை நுளம்பின் மூலமே பரவிவருகின்றது. இது இம்முறையே யாழ்ப்பாணத்தில் பரவியுள்ளதால் மக்கள் மத்தியில் இதற்கான தற்காப்பு வளங்கள் இல்லாதுள்ளது.

இதேநேரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 150 பேர் நாளாந்தம் டெங்கு சிகிச்சைக்காக வருகின்ற நிலையில், இம்மாதம் 1,284 பேர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். – இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.