முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வித்யலங்காரவை கைதுசெய்ய பிடியாணை!
நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியும் நீதிமன்றில் ஆஜராகாத ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வித்யலங்காரவை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா பிடியாணை பிறப்பித்துள்ளார்.
நிதிக்குற்றம் தொடர்பாக பிரதிவாதிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியிருந்தும் ஆஜராகாதமையையடுத்தே ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
கருத்துக்களேதுமில்லை