தசாப்தங்கள் மூன்று கடந்தாலும் சாவகச்சேரி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர்!

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் சாவகச்சேரி அம்பிகா மருந்தகத்தின் உரிமையாளருமான அமரர் சங்கரப்;பிள்;ளை நமசிவாயத்தின் 30 ஆவது ஆண்டு நினைவு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தில் அமரர் நமசிவாயம் நினைவு மண்டபத்தில் லயன் வ.சிறிபிரகாஸ் தலைமையில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வில் சாவகச்சேரி வணிகப்பெருமக்கள் பலரும் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

அமரர் சங்கரப்பிள்ளை நமசிவாயம், யுத்தம் உக்கிரமடைந்த காலத்தில் சாவகச்சேரி வணிகர் கழகத்தைச் சீரியபாதையில் கொண்டுநடத்தி நிறைவான மக்கள்பணி ஆற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.