புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கட்டாக்காலிகளால் கடும்சிரமம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பிரதேச சபையை அலுவலகத்தை அண்மித்த பகுதியில் மிக அதிக அளவிலான கட்டாக்காலி கால்நடைகள் இரவு வேளைகளில் வீதியில் உறங்குவதால் வீதியில் செல்லும் மக்கள் பல்வேறு  சிரமங்களை எதிர் நோக்குகின்றனர் எனக் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதிகளில் உறங்கும் கட்டாக்காலி கால்நடைகளால்  தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு பலருடைய உடைமைகள் மற்றும் அங்கங்களும் சேதமடைந்து இருக்கின்ற நிலைமையில் இது தொடர்பில்  அதிகாரிகளும் அக்கறையற்று இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த புதுக் குடியிருப்பு பிரதேச சபையினர் மிக விரைவில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.