தெஹிவளையில் நிறுவப்படும் வைத்தியசாலையை பார்வையிட்டார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்!

இலங்கை மன்ற உறுப்பினர்களால் தெஹிவளையில் நிர்மாணிக்கப்படும் புதிய வைத்தியசாலையை வெள்ளிக்கிழமை பார்வையிட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்  சென்றுள்ளார்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் –

இலங்கை மன்ற உறுப்பினர்களால் 40 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் முழு வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு, பிறந்த குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் கதிரியக்கப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கி வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகிறது.

இங்கு பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு திறன் மற்றும் பயிற்சியை வளர்ப்பதற்கான வழிகளை திட்ட மேலாளர்களுடன் நான் கலந்தாலோசித்தேன்.

இலங்கையின் எதிர்காலத்திற்கான இலங்கை – அமெரிக்கர்களின் தாராள மனப்பான்மையும் அர்ப்பணிப்பும் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மக்களுக்கும் இடையிலான உறவுகளுக்கு ஈர்க்கக்கூடிய எடுத்துக்காட்டாக குறித்த வைத்தியசாலை திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.