பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசங்கம் செய்த ‘அவலோகிதேஸ்வர’ கைதானார்!

 

பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசங்கம் செய்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மஹிந்த கொடிதுவக்கு என்ற அவலோகிதேஸ்வர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டிருந்துடன் வங்கி கணக்கு பதிவுகளையும் திரட்டுமாறும் கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மஹிந்த கொடிதுவக்கு என்ற அவலோகிதேஸ்வரவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி பல்வேறு தரப்பினர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அத்துடன் குறித்த நபருக்கு எதிரான விசாரணைகளின் அறிக்கையை செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.