யாழ். கைதடியில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலக கலந்துரையாடல்!

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, தேசிய நல்லிணக்க சமூகவாழ்வு, சகவாழ்வு அலுவலக பிரதானி திருமதி துசாரி சூரியராச்சி, பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் கிருஷாந்த பத்திராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், யாழ் மாவட்டத்தினுடைய பிரதேசசெயலாளர்கள், வவுனியா பல்கலைகழக வேந்தர் மோகனதாஸ், தினைக்களங்களின் உத்தியோகத்தர்கள் உட்படப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தென்மராட்சி மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலைய மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பனை கைப்பொருள் உற்பத்திப் பொருள்களைப்  பார்வையிட்டதோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.