யாழ்ப்பாண வணிகர் கழகத்தினருக்கும் நீதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

யாழ்ப்பாணம் வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் நீதி,சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ்வுக்கிடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணம் மனிப்பாய் வீதி வணிக கழக அலுவலகத்தில்  இடம்பெற்றது.

வட மாகாணத்துக்குள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவர்கள் எதிர்கொண்டுவரும் கஷ்டங்கள் தொடர்பாக இதன்போது வியாபாரிகள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்கள்.

இதுதொடர்பாக  ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கவனத்துக்கு செலுத்தி தேவையான சட்டதிட்டங்களை பொருத்தமான வகையில் திருத்தியமைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நீதி அமைச்சின் செயலாளர் எ.என்.ரணசிங்க, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் தலைவர் சரித் மாரபே, யாழ்ப்பாண வணிக கழக தலைவர் ஆர்.ஜெயசேகரன் உள்ளிட்ட வியாபாரிகள் சமூகம் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.