ரணிலுக்கான ஆதரவை அதிகரிக்கும் நோக்கம்: பொதுஜன பெரமுன வேட்பாளரை நிறுத்தாது! சண்டே டைம்ஸ் கருத்து

 

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது எனத் தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ்இ ரணில் விக்கிரமசிங்கவின் வாக்கு வங்கியை அதிகரிப்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து சண்டே டைம்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது –

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த விடயங்களிற்கு அப்பால் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ புதிய நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். நாங்கள் இன்னமும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து தீர்மானிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 14 ஆம் திகதி நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது வேட்பாளரை நிறுத்தவேண்டுமா என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் முக்கியமாகத்; தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தில் மிக முக்கியமான விடயங்களை மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.

முதலாவதாக தம்மிக பெரேரா உட்பட நான்கு வேட்பாளர்கள் குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது செல்லுபடியற்றவையாகிவிட்டன என்பதை மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்னமும் தெளிவாக தெரிவிப்பதென்றால் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் மாற்றத்திற்குள்ளாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசத்தின் நிலைப்பாட்டிற்கு மாறாக மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார் எனத் தெரிவிப்பது பிழையில்லை.

இந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது? குறிப்பாக ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது?

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என விடயங்கள்குறித்து நன்கு அறிந்த இரண்டு தரப்புகள் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலைப்பாடு என்னவென்றால் கட்சி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாது என்பதே என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரணில்விக்கிரமசிங்கவின் வாக்குவங்கியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த யோசனை காணப்படுகின்றது.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு எதிர்பாராத நன்மையொன்றும் கிட்டலாம். கட்சியிலிருந்து சிலர் வெளியேறியுள்ள நிலையில் ஏனையவர்களைத் தொடர்ந்தும் தக்கவைக்கலாம்.

மேலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிமல் லான்சா தலைமையிலான புதிய கூட்டணியில் இணைவதை இது தடுக்கும்.

இவ்வாறான சூழ்நிலையில் ஏன் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவால் ரணில்விக்கிரமசிங்க என்ற வேட்பாளருக்கு வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்க முடியாது?

இதற்கான காரணத்தை விடயமறிந்த மற்றுமொரு தரப்பு முன்வைத்துள்ளது.

கட்சி பிளவுபடலாம் என்ற அச்சமே இதற்கு காரணம் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை எதிர்க்கும் மற்றுமொரு கட்சிக்கு ஆதரவளிப்பதை வெறுக்கும் பல உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சிரேஸ்ட தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டத்திலாவது இணைந்துகொள்வார்களா என்ற கேள்விக்கு விடைகிடைக்கவில்லை. – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.